திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை கூத்தராற்றுப்படை மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர் , தன்னைப் போன்ற பிற புலவர்களிடம் , அம்மன்னனின் சிறப்புகளையும் , அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி , அம்மன்னனைக் காணச் செல்லுங்கள் , மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று , வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும் . இவ்வகை ஆற்றுப்படை நூல்களின் வழி , பழந்தமிழகத்தின் நில அமைப்பு , அரசர்கள் , வரலாறு , மக்கள் நிலை , விருந்தோம்பல் பண்பு , பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறியலாம் . கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளராக , செம்மாந்தப் பணியாற்றிய , கரந்தைக் கவியரசு அரங்க . வேங்கடாசலம் அவர்களும் , ஒரு ஆற்றுப்படை பாடியிருக்கிறார் . ஆசானாற்றுப்படை . தனக்குத் தமிழின் சுவை உணர்த்திய , தன் ஆசிரியர் குயிலையா எனப்படும் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் கற்க வாருங்கள் என அழைத்து ...