மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை நூலுக்கான ஆற்றுப் பா...
தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருதாளர் முனைவர் மோ.கோ. கோவைமணி பேராசிரியர் (ப.நி.), ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010. நேரிசை ஆசிரியப் பாவில் நேர்த்தியாய் சீரிசை முத்தாய் இணைய வரலாறு நீரிசை போலாய் நேர்த்தி செய்து, சேரிசை எங்கும் சேர்க்கும் இந்த இணைய ஆற்றுப் படையெனும் நூலை இணைந்தே ஆக்கிப் பதித்த இணையர் இன்றும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்ந்து பலப்பல வாழும் இலக்கியம் சீர்சால் நடைபோ லியல்தமிழ் போற்ற, மேலும் படைக்க வாழ்த்து கின்றேன். இணைய ஆற்றுப் படையெனும் நூலில் தமிழின் மேன்மை, தமிழர் சால்பு இமிழும் பொழுதில் துவண்டு போனேன். தமிழகச் சிறப்பை உலகுய்யச் செய்த தகைசால் வரிகள் உன்னத மாகும். எத்துறை யானாலும் அத்துறை தமதென உலகில் முந்தி நிற்கும் தமிழர் செய்த அளப்பெறும் பணிகள் எண்ணில. எனிலும், உலகம் உய்யப் போற்றும் கணினி வரவில் தமிழர் பங்கை நிரல்பட ஓதி, கலப்பின மில்லாது சிறப்புடன் எடுத்தே ஓவியம் தீட்டிய இளங்கோ நெஞ்சை ஏற்றுப் போற்றுவேன். இலங்கைத் தமிழர் இன்னல் கூறி இலக்கப் பயணம் வெற்றி கொண்ட கலக்க மில்லா திலக மேற்றி, நிலைக்க வைத்த பாங்குக் கண்டேன். புதுப்புது வரவுகள்...