அன்புடையீர், வணக்கம். சித்தர் பாடல்களைத் தம் ஆய்வுப்புலமாக அமைத்துக்கொண்டு, சித்தர் நெறிநின்று, துறையூரில் வாழ்ந்துவரும் முனைவர் கி . பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள 1. சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் , 2. சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அறிஞர்கள் முன்னிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்களும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறைச் செயலாளர் சீர்மிகு அ. நெடுஞ்செழியன் இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள் கலந்துகொண்டு சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினை நூலாசிரியருக்கு வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், சமய இலக்கிய ஆர்வலர்களையும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். அழைப்பின் மகிழ்வில் வயல்வெளிப் பதிப்பகம், உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரி – 60...