Posts

முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீட்டு விழா!

Image
    அன்புடையீர், வணக்கம்.   சித்தர் பாடல்களைத் தம் ஆய்வுப்புலமாக அமைத்துக்கொண்டு, சித்தர் நெறிநின்று, துறையூரில் வாழ்ந்துவரும் முனைவர் கி .  பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள 1. சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் , 2.   சித்தர்   சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அறிஞர்கள் முன்னிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்களும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறைச் செயலாளர் சீர்மிகு அ. நெடுஞ்செழியன் இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள் கலந்துகொண்டு சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினை நூலாசிரியருக்கு வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், சமய இலக்கிய ஆர்வலர்களையும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.   அழைப்பின் மகிழ்வில் வயல்வெளிப் பதிப்பகம், உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரி – 605 003 தொடர்புக்கு: 9442029053

வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன் அவர்களின் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல் வெளியீடு!

Image
  சித்தர் இலக்கியச்செம்மல் முனைவர் கி . பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் என்னும் நூலினை வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட உள்ளது. நூல் வெளியீடு குறித்த மேலதிக விவரங்களை விரைவில் தெரிவிப்போம்.

வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் நூல் வெளியீடு...

Image
  வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி . பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் என்ற நூல் விரைவில் வெளிவர உள்ளது …   இது சித்தர் பாடல்களை முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்;   1. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள், 2. சித்தர்கள் கூறும் சமுதாயச் செய்திகள், 3. சித்தர்கள் உணர்த்தும் இறையுணர்வு, 4. சித்தர்கள் புலப்படுத்தும் அறநெறிகள், 5.சித்தர்கள் சாடும் போலித்துறவும் பொய் ஆன்மீகமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் உள்ளடக்கம் அமைந்துள்ளது.   நூல் தேவைக்குத் தொடர்புகொள்ளவும்   muetamil@gmail.com   +91 9442029053

வயல்வெளிப் பதிப்பகத்தின் இணையம் கற்போம் நூல் வெளியீடு!

Image
  நூல்: இணையம் கற்போம் ஆசிரியர்: முனைவர் மு. இளங்கோவன் தமிழ் இணையம் சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இணையம் கற்போம் என்னும் தலைப்பில் நூலாக்கி 2009 இல் வெளியிட்டேன். அக்கட்டுரைகள் என் வலைப்பதிவிலும் பதிவேற்றப்பட்டன. பல கட்டுரைகள் தினமணி உள்ளிட்ட நாளிதழ்களிலும் வெளிவந்து  இணைய ஆர்வலர்களுக்குப் பயன்பட்டன.  இணையம் கற்போம் நூல் 29 கட்டுரைகளுடன், 256 பக்கங்களைக் கொண்டு இப்பொழுது மறுபதிப்பு கண்டுள்ளது. இந்த நூலுக்குக் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் முன்பே அழகியதோர் அணிந்துரை நல்கியுள்ளார்.  கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் வசதி, தமிழ்க் கல்வி தரும் இணையதளங்கள், தமிழுக்கு வளம் சேர்க்கும் இணையதளங்கள், தமிழ் மின்னூலகங்கள், விக்கிப்பீடியா, விகாஸ்பீடியா, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் அறிமுகங்கள் எளிய தமிழில் தரப்பட்டுள்ளன. இணையம் கற்போம்  நூல் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பு எண்: + 9442029053 மின்னஞ்சல்: muetamil@gmail.com விலை: 250 உருவா (GPay / paytm வசதி உண்டு)

வயல்வெளிப் பதிப்பகம்...

 தமிழின் வளர்ச்சிக்கு உதவும் நூல்களை வெளியிடும் நோக்கில் தொடங்கப்பட்ட நூல் வெளியீட்டு நிறுவனமே வயல்வெளிப் பதிப்பகம் ஆகும். தமிழகத்தின் அரியலூர் மாவட்டடம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் இந்தப் பதிப்பகம் தொடங்கப்பட்டு, நூல் வெளியீட்டுப் பணிகளைச் செய்து வருகின்றது. இப்பதிப்பகத்தின் நூல்களைப் புதுச்சேரியிலும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள வயல்வெளிப் பதிப்பகத்தின் நூல்களுள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம், இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் முதலியன குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் மு. இளங்கோவன் நூல்கள் 1.     மாணவராற்றுப்படை (1990) 2.     பனசைக்குயில் கூவுகிறது (1991) 3.     அச்சக ஆற்றுப்படை (1992) 4.     மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994) 5.     விடுதலைப் போராட்ட வீரர் வெ . துரையனார் அடிகள் (1995) 6.     பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு (1996) 7.     இலக்கியம் அன்றும் இன்றும் (1997) 8.     மணல்மேட்டு மழலைகள் (199