வயல்வெளிப் பதிப்பகத்தின் இணையம் கற்போம் நூல் வெளியீடு!

 


நூல்: இணையம் கற்போம்

ஆசிரியர்: முனைவர் மு. இளங்கோவன்

தமிழ் இணையம் சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இணையம் கற்போம் என்னும் தலைப்பில் நூலாக்கி 2009 இல் வெளியிட்டேன். அக்கட்டுரைகள் என் வலைப்பதிவிலும் பதிவேற்றப்பட்டன. பல கட்டுரைகள் தினமணி உள்ளிட்ட நாளிதழ்களிலும் வெளிவந்து  இணைய ஆர்வலர்களுக்குப் பயன்பட்டன. 

இணையம் கற்போம் நூல் 29 கட்டுரைகளுடன், 256 பக்கங்களைக் கொண்டு இப்பொழுது மறுபதிப்பு கண்டுள்ளது. இந்த நூலுக்குக் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் முன்பே அழகியதோர் அணிந்துரை நல்கியுள்ளார். 

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் வசதி, தமிழ்க் கல்வி தரும் இணையதளங்கள், தமிழுக்கு வளம் சேர்க்கும் இணையதளங்கள், தமிழ் மின்னூலகங்கள், விக்கிப்பீடியா, விகாஸ்பீடியா, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் அறிமுகங்கள் எளிய தமிழில் தரப்பட்டுள்ளன.

இணையம் கற்போம்  நூல் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பு எண்: + 9442029053 மின்னஞ்சல்: muetamil@gmail.com

விலை: 250 உருவா (GPay / paytm வசதி உண்டு)

Comments

  1. இனிய வாழ்த்துகள் ஐயா.

    வயல் உணவு கொடுக்கும்
    வயல்வெளி
    நற்றமிழ் உணர்வு கொடுக்கட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்