அறிஞர்கள் பார்வையில் இணைய ஆற்றுப்படை...
முனைவர் பா. வளன் அரசு
முனைவர் பா. வளன் அரசு
நிறுவுநர்,
தனித்தமிழ் இலக்கியக் கழகம்,
பாளையங்கோட்டை
– 627002
திருநெல்வேலி
மாவட்டம்.
அன்பார்ந்த தம்பி முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம். வாழிய நலம்.
இணைய ஆற்றுப்படை என்னும் அரிய பனுவலை 563 அடிகளுடன் ஆசிரியப்பாவால் வழங்கியுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கது.
இணையத்தளங்கள் ஐம்பது பற்றிய தொகுப்பு பேருதவி புரிகிறது. தமிழ் இணையத் துறைக்குப் பங்களித்தோர் பட்டியலை ஒளிப்படத்துடன் நல்கியது பெருமிதம் தருகிறது.
ஒல்லும் வகையெல்லாம் தமிழ் தழைத்தினிதோங்க விழைந்து உழைத்திடும் தங்களைப் போற்றி மகிழ்கிறன்.
தங்கள் முயற்சி திருவினை
ஆக்குவது உறுதி.
பா. வளன் அரசு
21.07.2024
இணைய ஆற்றுப்படை தேவைக்கு!
பேசி: +91 9442029053
மின்னஞ்சல்: muetamil@gmail.com
Comments
Post a Comment