இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம் - சுப்ரபாரதிமணியன்


கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை  ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம். அந்த வகையில் .இணையம் சார்ந்த  தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும்  தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல்

 ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம்.. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு.. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள்

அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது. இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன..  தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள், அதன்  சிறப்புகள், வளம், பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன

 நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும் என்று உழைத்த பெருமக்கள் பற்றிய குறிப்புகள் நிகழ்காலத் தன்மையுடன் வைக்கப்படுகின்றன. சரியான கவுரவம் அவர்களுக்கு

முன்பே ஆற்றுப்படை நூல்கள் சிலவற்றை எழுதி பயிற்சியை ஆழமாக்கிக் கொண்டவர் முனைவர் மு. இளங்கோவன். உலகப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள தமிழ் அறிஞர்கள் தாய்மொழியான தமிழிலும் உலகப் போக்குகளை நிலை பெறச் செய்யும் முயற்சியில் முனைந்தனர். அது பல சாதனைகளை செய்துள்ளது. கணினி,  இணையம் இல்லாத உலகம் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. அந்த உலகத்தில்,  இணையத் துறையின் செயல்பாடுகளை பற்றி இந்த நூல் சொல்கிறது. இந்த  ஆற்றுப்படையை  563 பாடல் அடிகளில் அமைந்திருக்கிறார் தொழில்நுட்ப வரலாறு மரபு வடிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையத்துக்கு பங்களித்தோர் என்ற விவரங்களில் முனைவர் அனந்தகிருஷ்ணன்,  நா கோவிந்தசாமி முதற்கொண்டு காலடி நாகராஜன்,  தகவல் உழவன் வரைக்கும் சிறப்பானப் பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியக் அறிமுகக் குறிப்புகளை    இந்த இந்த ஆற்றுப்படை அமைத்திருக்கிறது. தமிழில் இணைய முயற்சிகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒரு வகையை இது சிறப்பாக சுட்டி காட்டி இருக்கிறது

இந்த 563 அகற்பா வரிகளின் அனுபவங்களை,  சொல்லாட்சியை அகற்பா பற்றி தெரிந்தவர்கள் முழுமையாக நன்கு ரசித்து உணரலாம். மற்றவர்களுக்கும் கணினி, இணையம் சார்ந்த விபரங்களுக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்குகிறது

 (பக்கங்கள் 48, விலை ரூ 100,   வயல் வெளி  பதிப்பகம், இடைக்கட்டு, அரியலுர் 612901  -   944420 29053 ) 

 (முன்னுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது, வேறு கருத்துக்கள் இடம் பெறவில்லை )

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்