Posts

Showing posts from October, 2024

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

Image
  நனிபுக ழொடுபல ஆண்டுகள் வாழி! பாவலர் தெ. வச்சிரவேலன், சிங்கப்பூர் கன்னலின்  இனிமையும் கனிமொழி வாய்மையும் தன்னலம் இல்லாத் தம்முளத் தூய்மையும் புன்னகை மாறாப் பொலிமுக முங்கொண்ட ஒண்டமிழ் மொழிமேல் தன்னுயிர் வைத்த அன்புக் கினியர் ஆன்ற ஆர்வலர் துறைதொறும் தெளிந்த நிறைமொழி யாளர் அன்னார் இளங்கோ அறிமுகம் எனக்குப் பன்னாள் பழகிய பழக்கம் போன்று சென்ற ஆண்டு சிங்கைத் தெருவினில் சிறப்பாய் அமைந்தது செந்தமிழ் உணர்வொடு பிறப்பால் உணர்வால் பைந்தமிழ் போற்றும் நட்பினர் ஆனோம் நாளும் வளர்ந்த நட்பில் நயந்தோம் நலனொடு காப்போம் அண்மையில் அவர்தம் அருமை நூலைக் கண்டேன் மலைத்தேன் கவின்மிகு நடையில் அகவல் யாப்பில் தகவாய் அமைந்த இணைய ஆற்றுப் படையெனும் நன்னூல் போற்றத் தகுந்த படைப்பாம் அதனுள் தமிழகச் சிறப்பும் தமிழர் எழுச்சியும் தமிழர் உலகப் பரவலும் இலங்கைத் தமிழர் இன்னல் வாழ்வும் தொடங்கிக் கணினி இணைய வரவும் பரவலும் அணியாய்த் தொடுத்திங்கு அவைதாம் கண்ட  அளவிளா வளர்ச்சியை அழகுற அடுக்கியும்  தளராது உழைத்துத் தமிழ்க்கருந் தொண்டினை ஆற்றிய சான்றோர் அறிஞர் பலரையும் போற்றிப் பாடியும் புகழினை நுவன்றும் ஆற்றுப் பட...