தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

 


தமிழ் அன்பர்களுக்கு! வணக்கம். தொடரும் தொல்காப்பிய மரபு என்ற தலைப்பில் என் நூல் அச்சாக்கம் கண்டு, இன்று என் கையினுக்கு வந்துள்ளது. இந்த நூலில் 15 கட்டுரைகள் உள்ளன. முதல் ஐந்து கட்டுரைகள் தொல்காப்பியம் சார்ந்தும், மற்ற கட்டுரைகள் வேறு பொருண்மைகளிலும் உள்ளன. இக்கட்டுரைகள் யாவும் பல்வேறு ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை; நண்பர்களின் நூல்களுக்கு அணிந்துரைகளாக வரையப்பட்டவை. இத்தகு ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை இணையத்தில் பதிவதில்லை. நூல் வடிவில் இவற்றைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சி. 

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் 2025 சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) நாள்களில் மும்பையில் திருவாளர் சு.குமணராசன் ஐயாவின் தலைமையில் இயங்கும் இலெமுரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள தொல்காப்பியத் திருவிழாவில் - தொல்காப்பியக் கண்காட்சியில் அறிஞர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். 

நூல்: தொடரும் தொல்காப்பிய மரபு

ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

பக்கம்: 176

விலை 350 உருவா

தொடர்புக்கு: muetamil@gmail.com

செல்பேசி, புலனம்: +91 9442029053

Comments

Popular posts from this blog

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்