வலைத்தமிழ் பன்னாட்டு இதழில் (2024 ஆகத்து) இணைய ஆற்றுப்படை குறித்த அறிமுகம் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் வலைத்தமிழ் பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு எம் நன்றி.
முனைவர் மு.இளங்கோவன் எழுதிய ‘தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் (கோலாலம்பூர்)’ - நூல் அறிமுகம் தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வாளரான மு.இளங்கோவன் தொல்காப்பியத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் பேராசிரியர். தற்செயலாகத் தமக்குப் பார்க்கக் கிடைத்த ‘தொல்காப்பியம்: மக்கள் வாழ்வின் இலக்கணம்’ என்னும் நூலின் வழியாக, அதன் ஆசிரியரான நெல்லை இரா.சண்முகம் என்பவரைப்பற்றி அவர் தெரிந்துகொண்...
தமிழ் அன்பர்களுக்கு ! வணக்கம் . தொடரும் தொல்காப்பிய மரபு என்ற தலைப்பில் என் நூல் அச்சாக்கம் கண்டு , இன்று என் கையினுக்கு வந்துள்ளது . இந்த நூலில் 15 கட்டுரைகள் உள்ளன . முதல் ஐந்து கட்டுரைகள் தொல்காப்பியம் சார்ந்தும் , மற்ற கட்டுரைகள் வேறு பொருண்மைகளிலும் உள்ளன . இக்கட்டுரைகள் யாவும் பல்வேறு ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை; நண்பர்களின் நூல்களுக்கு அணிந்துரைகளாக வரையப்பட்டவை . இத்தகு ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை இணையத்தில் பதிவதில்லை . நூல் வடிவில் இவற்றைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சி . தொடரும் தொல்காப்பிய மரபு நூல் 2025 சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) நாள்களில் மும்பையில் திருவாளர் சு.குமணராசன் ஐயாவின் தலைமையில் இயங்கும் இலெமுரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள தொல்காப்பியத் திருவிழாவில் - தொல்காப்பியக் கண்காட்சியில் அறிஞர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். நூல்: தொடரும் தொல்காப்பிய மரபு ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன் பக்கம்: 176 விலை 350 உருவா தொடர்புக்கு: m...
Comments
Post a Comment