Posts

Showing posts from July, 2024

அறிஞர்கள் பார்வையில் இணைய ஆற்றுப்படை...

Image
  முனைவர் பா. வளன் அரசு முனைவர் பா. வளன் அரசு நிறுவுநர், தனித்தமிழ் இலக்கியக் கழகம், பாளையங்கோட்டை – 627002 திருநெல்வேலி மாவட்டம்.   அன்பார்ந்த தம்பி முனைவர் மு . இளங்கோவன் அவர்களுக்கு , வணக்கம் . வாழிய நலம் . இணைய ஆற்றுப்படை என்னும் அரிய பனுவலை 563 அடிகளுடன் ஆசிரியப்பாவால் வழங்கியுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கது .  இணையத்தளங்கள் ஐம்பது பற்றிய தொகுப்பு பேருதவி புரிகிறது . தமிழ் இணையத் துறைக்குப் பங்களித்தோர் பட்டியலை ஒளிப்படத்துடன் நல்கியது பெருமிதம் தருகிறது .  ஒல்லும் வகையெல்லாம் தமிழ் தழைத்தினிதோங்க விழைந்து உழைத்திடும் தங்களைப் போற்றி மகிழ்கிறன் .  தங்கள் முயற்சி திருவினை ஆக்குவது உறுதி .   பா . வளன் அரசு 21.07.2024 இணைய ஆற்றுப்படை தேவைக்கு! பேசி: +91 9442029053 மின்னஞ்சல்: muetamil@gmail.com

கவியருவி பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் வாழ்த்து

Image
  இணைய ஆற்றுப்படை தேவைக்கு! பேசி: +91 9442029053 மின்னஞ்சல்: muetamil@gmail.com

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்

Image
  பாவலர் மா. வரதராசன்  காலந்தோறும் மாறிவரும் மாற்றங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மொழியே நிலைத்துவாழும் சிறப்பைப் பெறுமென்பது மொழியியலார்தம் துணிபு .   நந்தமிழ்மொழியின் சிறப்பை மட்டுமே சொல்லி இறுமாந்து கொண்டிராமல் , கால மாற்றத்திற்கேற்ப அதன் உள்ளீட்டைத் தகவமைப்பதும் , அதனை இளையோரிடம் கடத்துவதும் இற்றை முதன்மைத் தேவை என்பதை நன்குணர்ந்த அறிஞர் பல்லோர் ஆற்றிய பெரும்பணிகளால் நம் தமிழ்மொழி இணையவுலகிலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது .   அத்தகு சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் இன்றியமையாத செயலாகும் . இக்காலத் தலைமுறைக்கு இணையத்தைப் பற்றி நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை . ஆனால் , தமிழின் சிறப்போடு இணையத்தின் பயன்பாட்டை அவர்களுக்குத் தெரிவிக்கும் போதுதான் தமிழின் சிறப்பு அடுத்தடுத்த தலைமுறைக்கும் தெரியவரும் .   இந்த அரியதொரு பணியைச் செய்த உணர்வாளர் பலரின் பேருழைப்பையும் , அப்பணியினூடாக வெளிப்படுத்தப்பட்ட தமிழின் அருமையையும் தமிழார்வலர் அன...

இணையத் தமிழ்த் தொண்டர் தொகையாக விளங்கும் இணைய ஆற்றுப்படை

Image
               பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்களின் மதிப்புரை தமிழுக்குத் தொண்டு செய்வோரை நாளும் அறிமுகம் செய்து வரும் நற்றிமிழ்த் தொண்டர் ,   இணைய ஆற்றலாளர்   அறிஞர் மு . இளங்கோவன் ஆவார் . மரபில் கருக் கொண்டு நவீனத்தில் உருக்கொண்டவர் . புதுச்சேரியின் தமிழ் அடையாளங்களில் அவரும் ஒருவர் . உலகு தழுவிய தொல்காப்பிய அறிஞர் . அவரின் புதிய படைப்பாக்க நூல் இணைய ஆற்றப்படை .  திறனாய்வாளர்களாக உருவானபின் படைப்புக்கண் பலருக்குத் திறப்பதில்லை . இணையத்திற்கு வந்தபின் மரபில் நோக்கம் கொள்வதில்லை . எழுத்து சிறப்பானால் பேச்சில் ஒளிரமுடிவதில்லை .   பாடல் திறன் இருந்தால் மற்றவை இருப்பதில்லை . இசைத் திறன் நுகர்வதற்கு வாய்ப்பே இல்லை . இதுபோன்ற பல இல்லாமைகளுக்கு இடையில் இல்லாமைகளே இல்லாதத் தமிழறிஞர் மு . இளங்கோவன் .    படைப்பாளர் , திறனாய்வாளர் , இணைய ஆற்றலர் , கவிஞர் , நாட்டுப்புறப் பாடலாசிரியர் , நல்ல பேராசிரியர் , எழுத்துக் கலை வல்லவர் , பேச்சுக்கலையில் சிறந்தவர் . பாடல்கலை...

புதிய வரவு: இணைய ஆற்றுப்படை

Image
  கணினி , இணையத்தில் தமிழ் இணைந்த வரலாறு அரை நூற்றாண்டைத் தொட உள்ளது . கணினி, இணையத்தில் தமிழை இணைப்பதற்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் முயன்று உழைத்துள்ளனர். அவர்களின் அறிவுழைப்பை உரைநடையில் நூலாகவும் கட்டுரையாகவும் எழுதி மக்கள் மன்றத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளனர்.   மரபுத் தமிழில் தொழில் நுட்ப வரலாற்றை வரைதல் வேண்டும் என்ற நோக்கில் 563 ஆசிரியப்பாவில் அமைந்த பாடலடிகளில் இணைய ஆற்றுப்படை என்னும் பெயரில் நூல் ஒன்றினை எழுதியுள்ளேன். இந்த நூல் உருவாவதற்கும், பதிப்பாவதற்கும் பெருந்தூண்டுதலாக இருந்தவர் முனைவர் நாக. கணேசனார் ஆவார். இவர் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் அறிவியலறிஞர் ஆவார். பலவாண்டுகளுக்கு முன்னர் என் மரபுப் பயிற்சியை அறிந்த இவர் இணைய ஆற்றுப்படையை எழுதுக எனத் தூண்டினார். நானும் நூறு பாடலடிகளை ஆர்வமாக எழுதி அன்றொரு நாள் விடுத்தேன். அதன் பின்னர் “இடைக்கண் முறிந்து”, வேறு பணிகளில் உழன்றவண்ணம் இருந்தேன்.   அண்மையில் நாக. கணேசனார் மீண்டும் இணைய ஆற்றுப்படையை உருவப்படுத்தி அனுப்புக என்றார். வேனில் விடுமுறைக்க...