Posts

Showing posts from September, 2024

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம் - சுப்ரபாரதிமணியன்

கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை   ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம் . அந்த வகையில் . இணையம் சார்ந்த   தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும்   தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல் .    ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம் .. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு .. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள் .  அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது . இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன ..   தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள் , அதன்   சிறப்புகள் , வளம் , பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன .    நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும...

வலைத்தமிழில் இணைய ஆற்றுப்படை அறிமுகம்

Image
 வலைத்தமிழ் பன்னாட்டு இதழில் (2024 ஆகத்து) இணைய ஆற்றுப்படை குறித்த அறிமுகம் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் வலைத்தமிழ் பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு எம் நன்றி.

ஆற்றுப்படை: இணைய ஆற்றுப்படை குறித்த கரந்தை ஜெயக்குமார் மதிப்புரை

Image
  திருமுருகாற்றுப்படை     பொருநராற்றுப்படை     சிறுபாணாற்றுப்படை     பெரும்பாணாற்றுப்படை   கூத்தராற்றுப்படை   மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர் , தன்னைப் போன்ற பிற புலவர்களிடம் , அம்மன்னனின் சிறப்புகளையும் , அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி , அம்மன்னனைக் காணச் செல்லுங்கள் , மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று , வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும் .    இவ்வகை ஆற்றுப்படை நூல்களின் வழி , பழந்தமிழகத்தின் நில அமைப்பு , அரசர்கள் , வரலாறு , மக்கள் நிலை , விருந்தோம்பல் பண்பு , பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறியலாம் .  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளராக , செம்மாந்தப் பணியாற்றிய , கரந்தைக் கவியரசு அரங்க . வேங்கடாசலம் அவர்களும் , ஒரு ஆற்றுப்படை பாடியிருக்கிறார் .  ஆசானாற்றுப்படை .  தனக்குத் தமிழின் சுவை உணர்த்திய , தன் ஆசிரியர் குயிலையா எனப்படும் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் கற்க வாருங்கள் என அழைத்து ...

மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை நூலுக்கான ஆற்றுப் பா...

Image
  தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருதாளர் முனைவர் மோ.கோ. கோவைமணி பேராசிரியர் (ப.நி.), ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010. நேரிசை ஆசிரியப் பாவில் நேர்த்தியாய் சீரிசை முத்தாய் இணைய வரலாறு நீரிசை போலாய் நேர்த்தி செய்து, சேரிசை எங்கும் சேர்க்கும் இந்த இணைய ஆற்றுப் படையெனும் நூலை இணைந்தே ஆக்கிப் பதித்த இணையர் இன்றும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்ந்து பலப்பல வாழும் இலக்கியம் சீர்சால் நடைபோ லியல்தமிழ் போற்ற, மேலும் படைக்க வாழ்த்து கின்றேன். இணைய ஆற்றுப் படையெனும் நூலில் தமிழின் மேன்மை, தமிழர் சால்பு இமிழும் பொழுதில் துவண்டு போனேன். தமிழகச் சிறப்பை உலகுய்யச் செய்த தகைசால் வரிகள் உன்னத மாகும். எத்துறை யானாலும் அத்துறை தமதென உலகில் முந்தி நிற்கும் தமிழர் செய்த அளப்பெறும் பணிகள் எண்ணில. எனிலும், உலகம் உய்யப் போற்றும் கணினி வரவில் தமிழர் பங்கை நிரல்பட ஓதி, கலப்பின மில்லாது சிறப்புடன் எடுத்தே ஓவியம் தீட்டிய இளங்கோ நெஞ்சை ஏற்றுப் போற்றுவேன். இலங்கைத் தமிழர் இன்னல் கூறி இலக்கப் பயணம் வெற்றி கொண்ட கலக்க மில்லா திலக மேற்றி, நிலைக்க வைத்த பாங்குக் கண்டேன். புதுப்புது வரவுகள்...

முனைவர் மு. இளங்கோவன் படைத்த இணைய ஆற்றுப்படை - முனைவர் கடவூர் மணிமாறன்

Image
முனைவர் இளங்கோ வனாரின் படைப்பாம் இணைய ஆற்றுப் படையெனும் இந்நூல் இணைய உலகுக் கினியநற் கொடையே! துணையாய்ப் பலர்க்கும் பயன்படும் தூதுநூல்! தமிழக வரலாறு, தமிழ்மொழி வரலாறு ஆசிரியப் பாவில் அழகுற உள்ளன. இணையப் பல்கலைக் கழகத் தோற்றம் பணிகள், இற்றை நிலையெலாம் இனிதுறப் பட்டிய லிட்டுப் படிக்கத் தந்துளார். மட்டென இனிக்கும் மாத்தமிழ் மொழியில்; பலரும் பயன்பெறப் பன்னூறு செய்தியை, நலமிகு கருத்தை நவிலும் பனுவல்! கையடக்கத்தில் கணினி இருப்பினும் ஐயம் போக்கும் அரிய பணியை நாளும் செய்வதை நலமார் இளங்கோ இந்த நூலினில் இனிதுற மொழிந்தார்! உலகு தழுவிய முயற்சி யாவும் இவரின் நூலால் இனிது தெரிந்தன. தமிழரின் கூரிய அறிவுப் பரப்பை அமிழ்தாய் நூலில் அழகுறப் பதித்துளார். விக்கி என்பது அவாயெனும் மொழிச்சொல் விக்கிப்பீடியா பன்மொழிக் களஞ்சியம், இணையத் தளமாம் நூலகம் தன்னில் பனையளவாகப் பல்லாயிரம் நூல்கள் படிக்க அச்சிடப் பயனாய் அமைந்துள: முடமிலாத் தமிழர் மூளைச் செழுமை அறிவியல் தொழில்கள் நுட்ப உத்திகள் பெரிதும் ஆவணம் ஆகிய மாட்சி: இணையம் இந்நாள் வாழ்வியல், உலகியல் நினைக்கும் தோறும் நெஞ்சம் மணக்கும்! என்பன வெல்லாம் இந்நூல் உணர்த்த...