Posts

நன்றி: தினமலர் (20.01.2026)

Image
 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்(கோலாலம்பூர்) நூலுக்குப் புலிகரம்பலூர் புலவர் அ. பொன்னையனார் வாழ்த்து!

Image
புலிகரம்பலூர் புலவர் பொன்னையன்  21----01-----2026--அறிவன் வைகறை.    ---4.  மணி ----------------------------------------- இடைக்கட்டு முனைவர்       இளங்கோ ஐயனே! தடைக்கட் டில்லாநின்       தமிழ்ச்சுவை மாந்தி உடைபட் டுள்ளதென்       உள்ளம்! சண்முகர்  நடைபெற் றுள்ள        நல்வர லாற்றை நள்ளிர விரண்டில்        நறுமலர்த் தேனைக்  கள்ளினை அருந்திக்       களிப்பவன் போலக்  கண்டுளங் கொண்டு        கலந்தனன் காண்க! விண்டிட வொண்ணா       வியப்பினன் ஆனேன்  நல்லதோர் படைப்பு;      நாட்டங் கொண்டு  செல்லரிக் காத        சிந்தனைத் தேடல்! வாழ்த்தினை வழங்கி       மகிழ்ந்திடு கின்றேன்  தோய்ந்தினும் பற்பல        தூயநல் நூல்கள் ஆய்ந்துளங் கண்டே      அளித்தே வாழ்க  பாய்ந்துளங் கவ்வும்        பாங்கினி...

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலுக்குத் தினத்தந்தி நாளிதழின் மதிப்புரை

Image
  (தினத் தந்தி,14.01.2026)

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலுக்குத் தினமணியின் அணிந்துரை

Image
  (தினமணி, 12.01.2026)

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலுக்கு - இந்து தமிழ் மதிப்புரை

Image
  (இந்து தமிழ் - 03.01.2026)

சென்னை- புத்தகக் கண்காட்சியில் தகைசால் தமிழ்த் தொண்டர்கள்

Image
 

அந்திமழை மதிப்புரை (சனவரி, 2026)

Image
 

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலினை அறிமுகம் செய்து எழுதியுள்ள எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி!

Image
   எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் படைப்பு நூல்கள் வழியாகவும் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகவும் தமிழுலகத்தின் பெருமைக்குரிய படைப்பாளராக மதிக்கப்படுபவர் . அண்மையில் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் “ தகைசால் தமிழ்த் தொண்டர்கள்”   நூலினை வெளியிட, திரு. பாவண்ணன் அவர்கள் அந்த நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு பெருமைசேர்த்தார். நூலின் சிறப்பினை “புக் டே” ( bookday.in) இணையத்தளத்தில் அறிமுகம் செய்து எழுதி, என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும், நூல் அறிமுகத்தை வெளியிட்டு உதவிய bookday.in இணையத்தளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.   புக் டே இணையத்தளத்தின் இணைப்பு: இங்கே

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் – நூல் வெளியீடு

Image
      தகைசால் தமிழ்த் தொண்டர்கள் என்னும் தலைப்பில் 42 தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் அடங்கிய நூலொன்றினை எழுதியுள்ளேன். இந்த நூலின் கட்டுரைகள் இணையத்தில் நான் முன்பு எழுதியவற்றின்   செம்மை வடிவம் ஆகும். நூல் அழகிய அமைப்பில் அச்சாக்கம் பெற்று ,   என் கையினுக்கு இன்று கிடைத்தது .    பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார், தொல்காப்பிய அறிஞர் கு. சுந்தரமூர்த்தி, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், முனைவர் இரா. திருமுருகனார், அறிஞர் ஆ. சிவலிங்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார், தமிழ்நூற் கடல் தி.வே.கோபாலையர்,   பாவலர் மணி ஆ. பழநி, பேராசிரியர் அடிகளாசிரியர், பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன், பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை,   திருக்குறள் பெருமாள், கருப்பக்கிளர் சு. இராமசாமிப் புலவர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வும் பணியும் இந்நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.   தகைசால் தமிழ்த் தொண்டர்கள்   நூல் விரைவில் வெளியீடு காண உள்ளது.   328 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும்.  ...

நன்றி: அந்திமழை, அக்டோபர், 2025

Image
 

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும் – பாவண்ணன்

Image
  முனைவர் மு.இளங்கோவன் எழுதிய ‘தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் (கோலாலம்பூர்)’ - நூல் அறிமுகம்  தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.  புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வாளரான மு.இளங்கோவன் தொல்காப்பியத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் பேராசிரியர். தற்செயலாகத் தமக்குப் பார்க்கக் கிடைத்த ‘தொல்காப்பியம்: மக்கள் வாழ்வின் இலக்கணம்’ என்னும் நூலின் வழியாக, அதன் ஆசிரியரான நெல்லை இரா.சண்முகம் என்பவரைப்பற்றி அவர் தெரிந்துகொண்...

நன்றி: தினமணி 29.09.2025

Image
 

நன்றி: இந்து தமிழ் (13.09.2025)

Image
 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்)

Image
  புதிய   நூல்   வெளியீடு :  தொல்காப்பியத்   தொண்டர்   ஒருவரின்   மறைந்து   கிடந்த   வாழ்வியலை  -  தமிழ்ப்பணிகளை   இத்தமிழுலகின்   பார்வைக்கு   வைப்பதில்   மகிழ்கின்றேன் .  பக்கம் : 144 விலை : 200  உருவா தொடர்புக்கு : muetamil@gmail.com புலனம் : +91 9442029053

இந்து நாளிதழில் இணைய ஆற்றுப்படைக்கு மதிப்புரை

Image
  நாள்: 31.05.2025

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

Image
  தமிழ் அன்பர்களுக்கு ! வணக்கம் . தொடரும் தொல்காப்பிய மரபு என்ற தலைப்பில் என் நூல் அச்சாக்கம் கண்டு , இன்று என் கையினுக்கு வந்துள்ளது . இந்த நூலில் 15 கட்டுரைகள் உள்ளன . முதல் ஐந்து கட்டுரைகள் தொல்காப்பியம் சார்ந்தும் , மற்ற கட்டுரைகள் வேறு பொருண்மைகளிலும் உள்ளன . இக்கட்டுரைகள் யாவும் பல்வேறு ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை; நண்பர்களின் நூல்களுக்கு அணிந்துரைகளாக வரையப்பட்டவை . இத்தகு ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை இணையத்தில் பதிவதில்லை . நூல் வடிவில் இவற்றைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சி .   தொடரும் தொல்காப்பிய மரபு நூல் 2025 சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) நாள்களில் மும்பையில் திருவாளர் சு.குமணராசன் ஐயாவின் தலைமையில் இயங்கும் இலெமுரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள தொல்காப்பியத் திருவிழாவில் - தொல்காப்பியக் கண்காட்சியில் அறிஞர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.   நூல்: தொடரும் தொல்காப்பிய மரபு ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன் பக்கம்: 176 விலை 350 உருவா தொடர்புக்கு: m...

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

Image
  நனிபுக ழொடுபல ஆண்டுகள் வாழி! பாவலர் தெ. வச்சிரவேலன், சிங்கப்பூர் கன்னலின்  இனிமையும் கனிமொழி வாய்மையும் தன்னலம் இல்லாத் தம்முளத் தூய்மையும் புன்னகை மாறாப் பொலிமுக முங்கொண்ட ஒண்டமிழ் மொழிமேல் தன்னுயிர் வைத்த அன்புக் கினியர் ஆன்ற ஆர்வலர் துறைதொறும் தெளிந்த நிறைமொழி யாளர் அன்னார் இளங்கோ அறிமுகம் எனக்குப் பன்னாள் பழகிய பழக்கம் போன்று சென்ற ஆண்டு சிங்கைத் தெருவினில் சிறப்பாய் அமைந்தது செந்தமிழ் உணர்வொடு பிறப்பால் உணர்வால் பைந்தமிழ் போற்றும் நட்பினர் ஆனோம் நாளும் வளர்ந்த நட்பில் நயந்தோம் நலனொடு காப்போம் அண்மையில் அவர்தம் அருமை நூலைக் கண்டேன் மலைத்தேன் கவின்மிகு நடையில் அகவல் யாப்பில் தகவாய் அமைந்த இணைய ஆற்றுப் படையெனும் நன்னூல் போற்றத் தகுந்த படைப்பாம் அதனுள் தமிழகச் சிறப்பும் தமிழர் எழுச்சியும் தமிழர் உலகப் பரவலும் இலங்கைத் தமிழர் இன்னல் வாழ்வும் தொடங்கிக் கணினி இணைய வரவும் பரவலும் அணியாய்த் தொடுத்திங்கு அவைதாம் கண்ட  அளவிளா வளர்ச்சியை அழகுற அடுக்கியும்  தளராது உழைத்துத் தமிழ்க்கருந் தொண்டினை ஆற்றிய சான்றோர் அறிஞர் பலரையும் போற்றிப் பாடியும் புகழினை நுவன்றும் ஆற்றுப் பட...

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம் - சுப்ரபாரதிமணியன்

கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை   ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம் . அந்த வகையில் . இணையம் சார்ந்த   தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும்   தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல் .    ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம் .. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு .. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள் .  அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது . இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன ..   தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள் , அதன்   சிறப்புகள் , வளம் , பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன .    நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும...

வலைத்தமிழில் இணைய ஆற்றுப்படை அறிமுகம்

Image
 வலைத்தமிழ் பன்னாட்டு இதழில் (2024 ஆகத்து) இணைய ஆற்றுப்படை குறித்த அறிமுகம் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் வலைத்தமிழ் பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு எம் நன்றி.

ஆற்றுப்படை: இணைய ஆற்றுப்படை குறித்த கரந்தை ஜெயக்குமார் மதிப்புரை

Image
  திருமுருகாற்றுப்படை     பொருநராற்றுப்படை     சிறுபாணாற்றுப்படை     பெரும்பாணாற்றுப்படை   கூத்தராற்றுப்படை   மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர் , தன்னைப் போன்ற பிற புலவர்களிடம் , அம்மன்னனின் சிறப்புகளையும் , அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி , அம்மன்னனைக் காணச் செல்லுங்கள் , மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று , வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும் .    இவ்வகை ஆற்றுப்படை நூல்களின் வழி , பழந்தமிழகத்தின் நில அமைப்பு , அரசர்கள் , வரலாறு , மக்கள் நிலை , விருந்தோம்பல் பண்பு , பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறியலாம் .  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளராக , செம்மாந்தப் பணியாற்றிய , கரந்தைக் கவியரசு அரங்க . வேங்கடாசலம் அவர்களும் , ஒரு ஆற்றுப்படை பாடியிருக்கிறார் .  ஆசானாற்றுப்படை .  தனக்குத் தமிழின் சுவை உணர்த்திய , தன் ஆசிரியர் குயிலையா எனப்படும் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் கற்க வாருங்கள் என அழைத்து ...